இறையே இதுநாள் நான் எதன் பொருட்டும்
கையேந்தியதில்லை - இதழோரம் ஒரு
ஏளனத்துடன்கடந்திருக்கிறேன் உன்னை ,
பொங்கும் செல்வத்துடனும்
என்னை விரட்டியடித்த வறுமையின் காலங்களிலும்
வணங்கினால் வரம் கிடைக்குமென
எல்லோரும் சொல்லியபோதும்
ஏகடியம் பேசி மறுத்திருக்கிறேன்
இப்போதும் நீ இருக்கிறாயோ
இல்லையோ - தெரியலை இருந்தால்
எனக்களிக்க கண்டிப்பாய் ஒரு வரமேனும்
வைத்திருப்பாய் அல்லவா ! அதை என் இன்னொரு
உயிருக்கு கொடு - அது துன்புரும்
செய்தி உணர்ந்த பின்
எனக்கேது அமைதி ......
Subscribe to:
Post Comments (Atom)

7 comments:
பதிவிக்கு வந்து பின்னூட்டம் இட்டதற்கு மிகவும் நன்றி மயிலிறகு!!
//அது துன்புரும்
செய்தி உணர்ந்த பின்
எனக்கேது அமைதி//
நல்ல கவிதைங்க மயிலிறகு!!!
எப்போ எங்கே நடந்தது இந்த சந்திப்பு, வல்லி?
சென்னையிலா..விவரங்கள்?
வாருங்கள் கார்த்திகேயன், உங்கள் பின்னூட்டத்திற்கும் நன்றி!
ம்ம்ம்..அருமையா இருக்கு....
வாருங்கள் மங்கை,
மிக்க நன்றி...
கவிதைக்கு வாழ்த்துக்கள். தமிழ்மண உதவிப்பக்கம் பார்த்து, அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகளில் உங்கள் பதிவு வர ஏற்பாடு செய்யுங்கள்.
அருமை!
வருடுகிறீர்கள்!
Post a Comment