Thursday, November 23, 2006

If Statue of Liberty was in India


ம்ம்ம்ம்ம்ம் நிலமை....ம்ம்ம்ம்ம்ம்

Friday, November 17, 2006

ஒரு வரமேனும்

இறையே இதுநாள் நான் எதன் பொருட்டும்
கையேந்தியதில்லை - இதழோரம் ஒரு
ஏளனத்துடன்கடந்திருக்கிறேன் உன்னை ,
பொங்கும் செல்வத்துடனும்
என்னை விரட்டியடித்த வறுமையின் காலங்களிலும்
வணங்கினால் வரம் கிடைக்குமென
எல்லோரும் சொல்லியபோதும்
ஏகடியம் பேசி மறுத்திருக்கிறேன்
இப்போதும் நீ இருக்கிறாயோ
இல்லையோ - தெரியலை இருந்தால்
எனக்களிக்க கண்டிப்பாய் ஒரு வரமேனும்
வைத்திருப்பாய் அல்லவா ! அதை என் இன்னொரு
உயிருக்கு கொடு - அது துன்புரும்
செய்தி உணர்ந்த பின்
எனக்கேது அமைதி ......

Sunday, November 05, 2006

தொலைதல்


நீ தேடுவாய் - என்பதால்

அடிக்கடி தொலைகிறேன்

தொலைவதும் தேடுவதுமாய்

நாட்கள் போகின்றன

திரும்பிப்பார்க்கையில்

நாம் கடந்தது - நாட்களல்ல

யுகங்கள்

Friday, November 03, 2006

இருவருக்கும் ஓர் உலகம்


எனக்கும் உனக்குமாய் ஓர் உலகம்
இருவரும் தாங்கியே பெற்றோம் !
தனி தனியாய் இருக்கையில்
கடந்தவை, சுமந்தவைவலித்தவை அதிகம்...
தீச்சுட்ட புண் ஆறிகரம் பற்றி ஒளி - மிகும்வழி புகுந்தோம் - கவி பாடி களிப்போம் இனி

தோகை


அதோ ! அதோ ! என ஓடிக்கொண்டிருக்கும்பேருந்தின் வழியே
அம்மா காட்ட விழி விரிய பார்த்ததுண்டு
தோழி கொடுத்த பீலியைகுட்டி போடும் என புத்தகத்தில் சுமந்ததுண்டு
சம்ஹார விழாவில் தூரல் விழஆடிய ஆட்டம் கண்ணுக்குள் இன்னும்..
பழனி அடிவாரத்தில் 5 ரூவாய்க்கு 1 எனஅப்பா வாங்கி வந்த தோகையிலமட்டும் நாட்டம் கொள்ளவில்லை - அப்போதும்..இப்போதும்..

ஆரம்பம், இனி ஆரம்பம்



வணக்கம் மயிலிறகின் முதல் வணக்கம்.
இரு உயிர்கள், ஒரு உறவு, அதன் கனவு.
அனைவருக்கும் பிந்திய தீபாவளி நல்வாழ்த்துக்களுடன்..மயிலிறகு...ஆரம்பம்