Saturday, December 30, 2006

வெறுமைகளால் ஆன நாட்கள்


வலிய விடுப்பு எடுத்து ஊர்- திரும்பி
அம்மாவிடம் கதைத்து
அண்ணன் மகன் குறும்புகளை
அவள் பட்டியலிட கண்ணில் - நீர்
வழிய சிரித்து புதுப்படம்
குறுந்தட்டில் போட்டு குடும்பமே
ஒன்றாய் படம் பார்த்து
"மணி 3 ஆகுது போய் படுங்கள் என" ஏச்சு
வாங்கி நிறைவாய் மெத்தையில்
படுக்க போகுமுன் சிரித்தும் - மகிழ்ந்தும்
என்ன பயன் நாங்கள்
பேசிக்கொண்டு ஆனது நாட்கள் 5

Wednesday, December 27, 2006

கிடைத்தற்கரியது


பொதி மூட்டை போல் - பாட புத்தகங்களை
சுமக்கும் பள்ளிச்சிறுவனாய்
உன் நினைவுகளை சுமந்தலைகிறேன்
எழுதுவதற்கும் பேசுவதற்கும்
யாருமற்ற நேரங்களில் உன்-
நினைவுகள் வருவதில்லை
என்ன செய்வது நாளேல்லாம்
எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டும்- தானே
இருக்கிறேன் உன் நினைவுகளோடு
கஞ்சன் கையில் கிடைத்த தங்ககாசு- நீ
அடிக்கடி எடுத்து பார்த்தும்
ஒளித்து வைத்தும்
மகிழ்கிறேன்- நான் மட்டும்