
வலிய விடுப்பு எடுத்து ஊர்- திரும்பி
அம்மாவிடம் கதைத்து
அண்ணன் மகன் குறும்புகளை
அவள் பட்டியலிட கண்ணில் - நீர்
வழிய சிரித்து புதுப்படம்
குறுந்தட்டில் போட்டு குடும்பமே
ஒன்றாய் படம் பார்த்து
"மணி 3 ஆகுது போய் படுங்கள் என" ஏச்சு
வாங்கி நிறைவாய் மெத்தையில்
படுக்க போகுமுன் சிரித்தும் - மகிழ்ந்தும்
என்ன பயன் நாங்கள்
பேசிக்கொண்டு ஆனது நாட்கள் 5

1 comment:
அதீத உணர்வுகளை படம்பிடித்த அருமையான கவிதை மையிலிறகு..
பேரில் இருக்கு ஒரு இலகுதன்மை உங்கள் கவிதையிலும் இருக்கு..
Post a Comment