
பொதி மூட்டை போல் - பாட புத்தகங்களை
சுமக்கும் பள்ளிச்சிறுவனாய்
உன் நினைவுகளை சுமந்தலைகிறேன்
எழுதுவதற்கும் பேசுவதற்கும்
யாருமற்ற நேரங்களில் உன்-
நினைவுகள் வருவதில்லை
என்ன செய்வது நாளேல்லாம்
எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டும்- தானே
இருக்கிறேன் உன் நினைவுகளோடு
கஞ்சன் கையில் கிடைத்த தங்ககாசு- நீ
அடிக்கடி எடுத்து பார்த்தும்
ஒளித்து வைத்தும்
மகிழ்கிறேன்- நான் மட்டும்

4 comments:
நல்லா இருக்கு மயிலு
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே..
இந்த வருடத்தில் கிடைத்த உங்கள் நட்பு எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. பரந்து விரிந்த இந்த உலகத்தில் நம்மை சேர்த்து வைத்த இந்த பிளாக்கருக்கு நன்றி.
இந்த புதிய வருடத்தில் ஆண்டவனிடன் நீங்கள் வேண்டும் யாவும் கிடைக்கப்பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் நீங்களும் உங்களும் குடும்பத்தினரும் எல்லா வித இன்பங்களும் கிடைக்கப் பெற்று வாழ வாழ்த்துக்கள். தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் மேலும் மேன்மை அடைந்து சிறக்க வாழ்த்துக்கள்
கவிதை அருமை !
பாராட்டுக்கள் !
உண் நினைவுகள் படுத்தும் பாட்டை வார்த்தைகாளால் எழுத முடியவில்லை...
அதனால் கனவுகளால் எழுதிக்கொண்டிருகிறேன்
Post a Comment